2023 புத்தாண்டு கடகம் காதல் ராசி பலன் | 2023 new-year katagam kaathal love rasipalan


கடகம் காதல் 2023

கடகம் ராசியில் பிறந்த ஆண்பெண் இருபாலருக்கும் 2023 ஆங்கில ஆண்டு ஜாதக நிலவரங்களின்படி காதல் விவகாரங்கள் எப்படி இருக்கும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

காதல் 2023 புத்தாண்டு

தனக்கு பிடித்தவர்கள்மீது அளவுகடந்த அன்பு காட்டக்கூடியவர்கள் கடகம் ராசிக்காரர்கள். எப்போதும் குழந்தைமனம் கொண்டவர்களாக   பிடிவாதத்துடன் எளிதில் கோபப்படக் கூடியவர்கள் கடக ராசிக்காரர்கள். காதலுக்கு மரியாதை கொடுக்ககூடியவர்கள் காதலை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிட்டாலும் தீவிரமாக ஆழமாக காதலிப்பார்கள். மற்றவர்களை தன்னுடைய திறமையான பேச்சு அழகான தோற்றம், அற்புதமான நடவடிக்கையால் கவர்ந்து இழுக்கக்கூடிய தன்மையை கொண்டவர்கள். ஒளிவு மறைவு இல்லாமல் பழகி உயிரைக் கூட கொடுக்ககூடியவர்கள் 

கடகம் ராசியின் கடந்த காலம்

கடந்த வருடம் அதாவது 2022ல் கடகம் ராசி அன்பர்களுக்கு கண்டகசனி நடந்து கொண்டிருந்தது  இந்த காலகட்டத்தில் பல சங்கடங்களை அனுபவித்துக் கொண்டிருந்ததால் பெரிய அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு காதலில் ஈடுபாடு இருந்துவந்தது. ஒருதலை காதலாகவும் காதலில் சண்டைகளும் பலசிக்கல்களும் பிரேக்அப் கூட நேர்ந்திருக்கலாம். 

குரு பகவான் கடகம் ராசி பலன்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு 2023ஆம் ஆண்டு குருபகவான் உங்களுடைய ராசிக்கு 9ஆம் இடத்தில் இருந்து கொண்டு உங்களுடைய ராசியை பார்ப்பார்.இந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் குரு பெயர்ச்சியில் குரு பகவான் உங்களுடைய ராசிக்கு பத்தாம் இடத்திற்கு வருவார் குரு பகவான் தன்னுடைய 5 7 9ஆம் பார்வையால் உங்களுடைய ராசிக்கு இரண்டு நான்கு ஆறாம் இடங்களை பார்ப்பார் உங்களுடைய இஷ்ட தெய்வம் குலதெய்வம் போன்றவற்றால் உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும்.

கடகம் ராசி காதல் சனி பகவான்

மேலும் 2023 ஜனவரி மாதம் 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் சனிபெயர்ச்சியில் சனிபகவான் உங்களுடைய அஷ்டமஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுடைய தனம் ஸ்தானத்தை பார்த்துக் கொண்டிருப்பார். 

கடகம் காதல்

காதல் வயப்படுவது என்பது குருபகவானின் அனுக்கிரகத்தாலேயே அமைகிறது. குருபகவானால் மட்டுமே காதலில் மகிழ்ச்சி சந்தோஷம் குதுகுலத்தை அதிகஅளவில் நமக்கு அளிக்க முடியும். இந்த 2023 ஆம் ஆண்டு கடகம் ராசியில் பிறந்த ஆண்பெண் இருபாலருக்கும் ஏப்ரல் மாதத்தில் ஏற்படக்கூடிய குருபெயர்ச்சியால் குருபகவானின் அனுக்கிரகத்தால் காதலில் வெற்றி கிடைக்கும். லவ் பிரேக்கப் ஆனவர்களுக்கு கூட புதிய காதல் கைகூடும்.

கோபம்

கடகம் ராசியில் பிறந்த ஆண்பெண் இருபாலரும் கோபத்தைகுறைத்து நிதானமாக திட்டமிட்டு மிருதுவான வசீகரமானவார்த்தைகளையும் உண்மையான அன்பான நெருக்கமானபழக்கத்தையும் கையாளுங்கள், காதலில் வெற்றி உண்டு. கடகராசி அன்பர்கள் பதட்டத்தை குறைத்து விட்டுக்கொடுக்கும் தன்மையை கடைப்பிடிப்பதால் காதலில் வெற்றி கிடைக்கும்.

கடகம் ராசி பரிகாரம்


பரிகாரம்


குருபகவான் ரதிதேவதை மன்மதன் போன்றவர்களை வழிபடுவதால் உங்களுடைய காதலில் உள்ள தடைகள் விலகி வெற்றி கிடைக்கும். மேலும் விநாயகர் முருகர் நரசிம்மர் ஆஞ்சநேயர்  தன்வந்திரிபகவான் ஐயப்பன் போன்ற தெய்வங்களை வழிபடுவதோடு  சித்தர்களுடைய ஜீவசமாதிக்கு சென்று வணங்கினால் 2023ஆம் வருடத்தில் உங்களுக்கு ஏற்படக்கூடிய கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும்.

மேலும் அடுத்துள்ள பல சுவாரசியமான விஷயங்களை தெரிந்து கொள்வோம்

காதல் பதிவுகள்



Comments

ராம் அம்மு வலைப்பதிவுகள் - ram ammu blogss

மகரம் ராசி கேது பெயர்ச்சி பலன்கள் 2022 2023 பரிகாரம் - makaram rasi rahu ketu payarchi palangal parigaram 2022 23 in Tamil