2023 புத்தாண்டு மிதுனம் காதல் ராசிபலன் | 2023 New-year kaathal love nonhuman rasipalan


மிதுனம் ராசியில் பிறந்த ஆண்பெண் இருபாலருக்கும் இந்த 2023 ஆங்கில ஆண்டு கிரக மாற்ற நிலவரங்களின்படி காதல் எப்படி இருக்கும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். மிதுனம் ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், தைரியமாகவும் சாமர்த்தியமாகவும் போராடி ஜெயிக்கும் இயல்புடையவர்கள். இயல்பாகவே அறிவுகூர்மை உடையவர்கள். மிதுனம் ராசியில் பிறந்த அன்பர்கள் காதலை விரும்பாதவர்கள் என்றாலும் விரும்பினால் உறுதியாகவும் உண்மையாகவும் காதலிக்ககூடியவர்கள். காதலுக்கு மரியாதை கொடுக்ககூடியவர்கள் காதலை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிட்டாலும் தீவிரமாக ஆழமாக காதலிப்பார்கள். மற்றவர்களை தன்னுடைய அழகான பேச்சு அழகான தோற்றம், அற்புதமான நடவடிக்கையால் கவர்ந்து இழுக்கக்கூடிய தன்மையை கொண்டவர்கள். ஒளிவு மறைவு இல்லாமல் பழகக் கூடியவர்கள்.

கடந்த வருடம் அதாவது 2022ல் மிதுனம் ராசி அன்பர்களுக்கு அஷ்டமசனி நடந்து கொண்டிருந்தது. குருபகவானும் உங்களுடைய ராசிக்கு பத்தாம் இடமான மீனராசி தொழில் ஸ்தானத்தில் இருந்தார். இந்த காலகட்டத்தில் பெரிய அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு காதலில் ஈடுபாடு இருந்துவந்தது. ஒருதலை காதலாகவும் காதலில் சண்டைகளும் பல சிக்கல்களும் பிரேக்அப்கூட நேர்ந்திருக்கலாம்.

மிதுனம் ராசியில் பிறந்த ஆண்பெண் இருபாலருக்கும் இந்த 2023 ஆம் ஆண்டு குருபகவான் முதலில் உங்கள்  தொழில்ஸ்தானத்தில் இருந்து பிறகு லாப ஸ்தானத்திற்கு செல்வார். உங்களுடைய எண்ணம் ஆசை கனவு கற்பனை அபிலாசை போன்றவைகள் நிறைவேறும்.

2023 மிதுனம் காதல் ராசிபலன்

மேலும் 2023 ஜனவரி மாதம் 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் சனி பெயர்ச்சியில் சனிபகவான் உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிப்பார். காதல்வயப்படுவது என்பது குரு பகவானின் அனுக்கிரகத்தாலேயே அமைகிறது.

இந்த 2023 ஆம் ஆண்டு மிதுனம் ராசியில் பிறந்த ஆண்பெண் இருபாலருக்கும் சனி பகவானால் பேர் புகழ் எண்ணம் ஆசை கூடும். ஏப்ரல் மாதத்தில் ஏற்படக்கூடிய குருபெயர்ச்சியால் குருபகவானின் அனுக்கிரகத்தால் உங்களுக்கு காதலில் வெற்றி கிடைக்கும். லவ் பிரேக்கப் ஆனவர்களுக்குகூட புதிய காதல் கைகூடும். மிதுனம் ராசியில் பிறந்த ஆண்பெண் இருபாலரும் நிதானமாக திட்டமிட்டு மிருதுவான வசீகரமான வார்த்தைகளையும் உண்மையான அன்பான நெருக்கமான பழக்கத்தையும் கையாளுங்கள், காதலில் வெற்றி உண்டு.

காதல் பரிகாரம்


பரிகாரம்


குருபகவான் ரதிதேவதை மன்மதன் போன்றவர்களை வழிபடுவதன்மூலமாக உங்களுடைய காதலில் இருந்துவந்த தடைகள் விலகி வெற்றி கிடைக்கும். மேலும் விநாயகர் முருகர் ஆஞ்சநேயர் நரசிம்மர் தன்வந்திரிபகவான் ஐயப்பன் போன்ற தெய்வங்களை வழிபடுவது மட்டுமில்லாமல் சித்தர்களுடைய ஜீவசமாதிக்கு சென்று வருவதால் 2023ஆம்  ஆண்டில் உங்களுக்கு ஏற்படக்கூடிய கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும். நன்றி.


மேலும் அடுத்துள்ள பல சுவாரசியமான விஷயங்களை தெரிந்து கொள்வோம்







Comments

ராம் அம்மு வலைப்பதிவுகள் - ram ammu blogss

மகரம் ராசி கேது பெயர்ச்சி பலன்கள் 2022 2023 பரிகாரம் - makaram rasi rahu ketu payarchi palangal parigaram 2022 23 in Tamil