மேஷம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 2023Mesham rasi rahu ketu payarchi palangal 2022 23 in Tamil

 

Ff
வணக்கம்.🙏
இந்த பதிவில் 2022-2023, ஒன்றரை வருட கால ராகு-கேது பெயர்ச்சி, மேஷ ராசிக்கான பலன்களை பார்ப்போம்.
👇👇👇👇👇
மேஷ ராசி அன்பர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியின்போது, ராகு பகவான் உங்களுடைய ராசியில் சஞ்சரிப்பார். உங்களுடைய பணம், பணம் சம்பந்தமான விஷயங்கள், இந்த வருடம் நன்றாக இருக்கும். வருமானத்தை கொடுப்பார் ராகு பகவான், மேலும் ராகு பகவான் உங்களுடைய ஐந்தாம் இடத்தை தொடர்புகொள்வார். 5-ஆம் இடம் என்பது மகிழ்ச்சி சந்தோஷம் குதுகுலம். எனவே இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு வாழ்க்கையில் பொழுதுபோக்குகள்  சந்தோஷங்கள் இருக்கும். அடிக்கடி சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. காதலில் உள்ள ஆண் பெண் இரு பாலருக்கும் காதலில் வெற்றி கிடைத்து பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மேஷராசிக்காரர்கள் இந்த ராகு கேது பெயர்ச்சி காலகட்டத்தில் காதலில் ஈடுபடாதவர்கள்கூட காதலில் ஈடுபட்டு வெற்றி காண்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேஷராசிக்காரர்களுக்கு ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு ஷேர் மார்க்கெட் ரேஸ் மற்றும் ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் அதிக ஆர்வம் இருக்கும். உங்களுக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும். அதிகம் உழைக்காமல் சம்பாதிக்கும் சூழ்நிலையை இந்த காலகட்டத்தில் உருவாகும். உங்கள் வேலைக்கு மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது, அதாவது கம்பெனி மாற்றம் பதவி மாற்றம் ஊர் மாற்றம் போன்றவைகள் ஏற்படலாம். வேலையிலிருந்து வெளியில்  வந்து வேறு வேலைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவைகளெல்லாம் ராகு பகவான் உங்களுடைய ஐந்தாமிடத்தில் தொடர்பு கொள்வதால் ஏற்படும்.
நீங்கள் வேலை செய்யும் இடத்தில்  மிக கவனமாக இருக்க வேண்டும். இதுவரை நீங்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தீராத நோய்களில் இருந்து இந்த காலகட்டத்தில் விடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சி காலகட்டங்களில் கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பெயர் புகழ் அந்தஸ்து போன்றவை  உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த காலகட்டத்தில் மேஷ ராசியில் பிறந்த அன்பர்களுக்கு வேலை மற்றும் பிசினஸ் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அரசியல் மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பெயர் புகழ் அந்தஸ்து உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அரசு மற்றும் அரசு அதிகாரிகளிடம்இருந்து உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
திருமண வயதில் உள்ள ஆண் பெண் இரு பாலருக்கும் இதுவரை இருந்து வந்த திருமண தடைகள் விலகி திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. வெகுநாட்களாக திருமணம் நடக்காமல், கைகூடாமல் இருந்து  வந்த மேஷராசிக்காரர்களுக்குகூட இந்த ராகு கேது பெயர்ச்சி காலகட்டத்தில் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சி காலகட்டங்களில் பணவரவுக்கு உங்களுக்கு எந்தவிதமான பிரச்சனைகளும் இருக்காது.இந்த ராகு-கேது பெயர்ச்சியில் ராகு பகவான் பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார் என்பதால் நீங்கள் இந்த காலகட்டத்தில் வண்டி வாகனங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மோட்டர்பைக் கார் இவைகள் இருந்தால் அதை பழுது பார்த்து சரி செய்யவும் புதிதாக வாங்கவும் வீட்டுக்கு தேவையான குளிர்சாதனபெட்டி மிக்ஸி கிரைண்டர் போன்ற பலவிதமான உபயோகமான பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
நீங்கள் சொந்த பிசினஸ் செய்தால் அது பிரச்சனை இல்லாமல் இருக்கும் அதுமட்டுமில்லாமல் பார்ட்னர்ஓடு சேர்ந்து பிசினஸ் செய்தாலும் அது உங்களுக்கு லாபகரமாக அமையும். நீங்கள் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்கள் செய்தாலும் உங்களுக்கு அது சாதகமாகவும் லாபகரமாகவும் அமையும். உங்களுடைய திருமண வாழ்க்கையில் அதாவது குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சீராக இருக்கும். தொழில், சிறு தொழில், ஆன்லைன் பிசினஸ் அல்லது பிளாட்பார பிசினஸ் செய்து கொண்டிருக்கும், மேஷ ராசி அன்பர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி ஓரளவுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சியின் புதன் பகவான் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் மற்றும் ஆறாம் இடத்திற்கு உரியவராக உள்ளார். நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் தடை இருந்தாலும் அது வெற்றியில் முடிவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ராகு கேது பெயர்ச்சிக்கு மறுநாள் அதாவது 2022ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறும். அப்போது குரு பகவான் உங்களுடைய ராசிக்கு 12-ம் இடத்திற்கு வருவார்.
12-ஆம் இடம் என்பது விரய ஸ்தானம் ஆகும். எனவே நீங்கள் சுபகாரியங்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு அதிகம் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் ஏஜென்சி புரோக்கரேஜ் காண்ட்ராக்ட் கன்சல்டன்ஸி ரியல்எஸ்டேட் ட்ரான்ஸ்போர்ட் அண்ட் கம்யூனிகேஷன் டிஜிட்டல் மீடியா போன்ற துறைகளில் உள்ளவர்களாக இருந்தால், ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம் இந்த ராகு கேது பெயர்ச்சி யில் உள்ளது.
மெடிகல்புரோபஷன் ஹோட்டல் ரெஸ்டாரன்ட் துறைகளில் உள்ளவர்களுக்கும் நல்ல முன்னேற்றங்கள் உள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் நீங்கள் உற்பத்தி சார்ந்த துறைகளில் இருந்தால் உங்களுடைய உற்பத்திக்கு தகுந்த பலன் கிடைக்கும். மேஷ ராசி அன்பர்கள் தந்தையாரின் உடல் நலத்தில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல் வேண்டும். அம்மாவின் உடல்நலத்திலும் கவனம் எச்சரிக்கை தேவை. மற்றும் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுதல் மிக மிக அவசியமாகும். இந்த ராகு கேது பெயர்ச்சியில் கேது பகவான் உங்களுடைய ராசிக்கு ஏழாமிடத்தில் சஞ்சரிப்பார்.
கேது பகவான் குருபகவானின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். குருபகவான் உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் அதிபதி எனவே உங்களுடைய உயர்கல்வி மிகச் சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்பாக இது அமைகிறது.
9-ஆம் இடம் என்பது தொழில் மாற்றங்கள் தொழில் செய்யும் இடத்தின் மாற்றங்களை குறிக்கும். எனவே உங்களுக்கு வேறு தொழில் அல்லது வேறு வேலை செய்யும்இடம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சி காலகட்டங்களில் வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்ப்பதற்கும், வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி படிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. குருபகவானின் நட்சத்திரத்தில் கேது பகவான் சஞ்சாரம் செய்யும்போது, குருபகவான் உங்களுடைய ராசிக்கு 9 12 என்பதால், நீங்கள் வெகுதூரம் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீண்டதூரம் யாத்திரைகள் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
உங்களுடைய குலதெய்வங்கள் இஷ்ட தெய்வங்களை நீங்கள் வணங்குவதற்கும், வணங்குவதற்கான ஈடுபாடுகள் அதிகமாக இருப்பதற்கும் வாய்ப்புகள் அமையும். அதுமட்டுமில்லாமல் குலதெய்வங்கள் இஷ்ட தெய்வங்களால் உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தந்தை உங்களை விட்டுப் பிரிந்து இருப்பதற்கான வாய்ப்புகளும் அல்லது நீங்கள் தந்தையை விட்டு பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகளும் இந்த காலகட்டத்தில் உள்ளது.
முதல் திருமணம் செய்து தோல்வி அடைந்தவர்கள் அதாவது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு திருமணம் கைகூடுவதற்கான வாய்ப்புகள் இந்த காலகட்டத்தில் உள்ளது. மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி காலகட்டங்களில் வெளிநாடு விஷயங்கள் அனைத்திலும் நற்பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
வீட்டை விட்டு வெளியில் அதாவது வெளியூர் வெளிமாநிலம் வெளிநாடு போன்றவற்றிற்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
கேது பகவான் குரு பகவானின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் கால கட்டங்களில் நீங்கள் பாஸ்போர்ட் விசா போன்றவற்றிற்கு முயற்சி செய்தால் அது உங்களுக்கு சாதகமாக அமையும். வெளிநாடுகளில் சிட்டிசன்ஷிப் அல்லது பிஎன்ஆர் போன்றவற்றிற்கு முயற்சி செய்தால் அது உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய உயர் கல்வி சிறப்பாக இருக்கும் என்பது மட்டுமில்லாமல் நீங்கள் ரிசர்ஜ் அல்லது பிஎச்டி செய்ய எண்ணினால் அது உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி காலகட்டங்களில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். ஏற்கனவே படித்துக்கொண்டிருந்தாள் நல்லபடியாக இந்த கோர்ஸை முடிப்பதற்கான வாய்ப்புகள உள்ளது். இந்த காலகட்டங்களில் விவாகரத்து செய்ய விரும்பும் கணவன் மனைவிகளுக்கு இந்த காலகட்டங்களில் அது நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இந்த கால கட்டங்களில் உங்களுக்கு லோன் அதாவது கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றாலும் நீங்கள் கடன் வாங்குவது கொடுப்பது ஜாமீன் கையெழுத்து போடுவது போன்றவற்றை தவிர்த்தல் நல்லது. இல்லையேல் இந்த காலகட்டத்தில் நீங்கள்  பிரச்சனைகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் இந்த காலகட்டங்களில் உங்களுடைய உழைப்பு மற்றவர்களுக்கு லாபமாக அமையும் உங்களுக்கு விரைவாக அமையும். நீங்கள் அரசு வேலைக்கு ஏதேனும் போட்டி தேர்வுகள் எழுதி இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக அமைந்து வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த காலகட்டங்களில் செவ்வாயின் நட்சத்திரத்தில் அதாவது துலாமில் கேது பகவான் இருப்பார். எனவே வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போதும் போக்குவரத்தில் பயணம் செய்யும் போதும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல் வேண்டும்.
சனிபகவான் கோச்சாரத்தில் பத்தாம் இடத்தில் இருந்துகொண்டு ஏழாமிடத்தில் கேது பகவானை பார்ப்பார். எனவே இந்த ராகு கேது பெயர்ச்சி யில் சனியின் பார்வையில் கேது உள்ளது. பத்தாமிடம் கௌரவம் செல்வம் செல்வாக்கு அந்தஸ்து புகழ் போன்றவை. இவைகள் காப்பாற்றப்படும். மேலும் உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பிசினஸ் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த காலகட்டங்களில் உங்களுக்கு ஒழுக்கம் தவறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.
பரிகாரம்.
நீங்கள் விநாயகரை மற்றும் முருகப்பெருமானை வழிபடுதல் வேண்டும். துர்க்கை காளி வழிபாடு செய்ய வேண்டும்.
முன்னோர்கள் மற்றும் சித்தர்களுடைய ஜீவ சமாதிக்கு சென்று வழிபடுதல் வேண்டும். இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வத்தை வழிபடுதல் வேண்டும்.
மேஷ ராசி ஆண் பெண் இருபாலரும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.

நன்றி.

Comments

ராம் அம்மு வலைப்பதிவுகள் - ram ammu blogss

மகரம் ராசி கேது பெயர்ச்சி பலன்கள் 2022 2023 பரிகாரம் - makaram rasi rahu ketu payarchi palangal parigaram 2022 23 in Tamil